நவம்பர் 1–ல் மழலையர் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு
மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1 ந்தேதி திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 1 முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் பிளே ஸ்கூல் போன்ற மழலையர் பள்ளிகளையும், 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது. தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை. மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Tags :