கஞ்சா கடத்தி விற்பனை செய்த 3பெண்கள் கைது.

by Staff / 26-12-2022 05:25:58pm
கஞ்சா கடத்தி விற்பனை செய்த 3பெண்கள் கைது.

மதுரை எழுமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மானூத்து முனியாண்டி கோவில் மொட்டைபாறை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து எழுமலை காவல்துறையினரின் சோதனையில் ஆந்திராவில் இருந்து 22கிலோ கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துவந்த மானூத்து பகுதியை சேர்ந்த பவுன்தாய்(56), வடக்குதெருவை சேர்ந்த பிராபாவதி (எ) பேச்சியம்மாள்(34)/ 3) பேச்சியம்மாள்(45) ஆகிய 3பெண்களை கைது செய்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் - மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தகவல்.மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை. 

 

Tags :

Share via