தரமில்லாத தூண்டில் வளைவு ஆட்சியர் அழகு மீனா உறுதி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடைபெற்ற மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரிதிநிதிகள், மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் மேல் மிடாலத்தில் கடற்கரை பகுதியில் தரமில்லாத தூண்டில் வளைவு 100 மீட்டர் நீளத்தில் போடப்பட்டது கடலில் சிதைந்து உருக்குலைந்து தற்போது 60 மீட்டராக நீளம் குறைந்து உள்ளது இது போல் தான் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் தரம் குறைவான தூண்டில் வளைவுகள் போடபட்டு உள்ளது என்றும், இணையம் கடற்கரை கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் பட்டா வழங்க மீனவர்களின் கோரிக்கை கூட்டத்தில் ஏற்க்கபட்டது. என்றும் கடற்கரை கிராமங்களில் சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும் கூட்டத்தில் ஆட்சியர் அழகு மீனா உறுதியளித்தார்
Tags : ஆட்சியர் அழகு மீனா உறுதி.