விடுதலை -2 படத்தில் நடித்த துணை நடிகர்கள் பிரச்சனை..

by Editor / 30-04-2024 11:52:59am
விடுதலை -2 படத்தில் நடித்த துணை நடிகர்கள் பிரச்சனை..

நடிகர் விஜய் சேதுபதி - காமெடி நடிகர் சூரி நடிக்கும் விடுதலை -2 படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு முறையான ஊதியம் வழங்கபடவில்லை. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி  விஜய்சேதுபதி,மஞ்சுவாரியர், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியான விடுதலை -1 திரைப்படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில் விடுதலை - 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு மீதமுள்ள காட்சிகளை படக்குழுவினர்   தற்போது தென்காசி,அம்பாசமுத்திரம் ,குற்றாலம் உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருவாரம் படப்பிடிப்பு  நடைபெற உள்ள நிலையில், 

 20 க்கும் மேற்பட்ட  துணை நடிகர்களை மதுரையிலிருந்து ப்ரோக்கர் ஒருவர் அழைத்து வந்துள்ளாா். நடித்த துணை நடிகர்களுக்கு பேசிய ஊதிய வழங்கவில்லை .அதனால்,படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் தென்காசி ரயில் நிலையம் முன்பு மிகுந்த சத்தத்துடன் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காததை கண்டித்து பிரச்சனையில் ஈடுபட்டனர்..  தாங்கள் விடுதலை - 2 படத்தில் நடிக்க வந்ததாகவும், தங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம்  சம்பளம் பேசி தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் ரூ.350 கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைகளில் வைரலாகி வரும் நிலையில்,  போலீசாரும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு துணைநடிகர்களுக்கு சம்பளம் கொடுப்பது ஏஜெண்ட்கள்தான் பட நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஏஜெண்ட்கள் செய்யும் தவறுகளுக்கு நிர்வாகம் எப்படி பொறுப்பு ஏற்குமென்றனர்..

 

Tags : விடுதலை -2 படத்தில் நடிக்க ஆட்களை கூட்டிவந்து ஆட்டையை போட்ட புரோக்கர்.

Share via

More stories