ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் குறித்து வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.அப்போது அவர் பேசியதாவது,
17ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு எம்ஜிஆர் நினைவு இடத்திற்கும் சசிகலா செல்வதால் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை அதிமுகவினர் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள்.
சசிகலாவின் ஆசியுடன் தொடங்கப்பட்ட அமமுகவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.மத்தியில் அக்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை எங்களை பொறுத்தவரை, நரி இடது பக்கம் போனாலும் வலது பக்கம் போனாலும் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவம் தற்போது திமுக ஆட்சி அமைத்தவுடன் அந்த சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை அரசுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்த வேண்டும்
அதிமுகவை விட 1 சதவீத வாக்கு அதிகமாக பெற்று மயிரிழையில் திமுக ஆட்சி அமைத்து இருக்கிறது. மக்கள் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கவில்லை எனவும் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயக படுகொலை செய்திருக்கிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றிருப்பதற்கு அவர்கள் தேர்தலை நடத்தாமல் திமுகவே வெற்றி பெற்றதாக அறிவித்து இருக்கலாம் அதிமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையத்திடம் அளித்த 17 புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடைபெற்று முடிந்த தேர்தலை பொறுத்தவரை கௌரவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது, அதர்மத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.சசிகலா தொடர்ந்து அதிமுக கொடி மற்றும் பொதுச் செயலாளர் என்ற பெயரை பயன்படுத்தி வருவது சட்ட விதிமுறை மீறல் என்றும் இது குறித்து கட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.அதிமுக பொன்விழாவில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் குறித்து கட்சி தலைமை அறிவிக்கும் எனவும் கட்சியில் நெடுங்காலமாக உறுப்பினராக இருக்க கூடியவர்களுக்கு மரியாதை செய்யப்படும்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்
Tags :