சென்னையில் விபச்சாரம் - காவல்துறை அதிரடி
சென்னை, கொளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்தியபோது புழல் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சசிகலா உட்பட இருவரை கைது செய்த காவல்துறையினர், அங்கிருந்த பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Tags :



















