கேட் கீப்பரின் அலட்சியத்தால் காவு வாங்கப்பட்ட 3 உயிர்கள்

by Editor / 09-07-2025 05:24:33pm
கேட் கீப்பரின் அலட்சியத்தால் காவு வாங்கப்பட்ட 3 உயிர்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று (ஜூலை 9) ரயில் - தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரயில் வரும் நேரத்தில் கேட்டை பூட்டாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரயில் நிலைய அதிகாரியிடம் இருந்து தகவல் கிடைத்ததும் தனது பணியை செய்யாமல் 5 முறை ஏற்கனவே உறங்கி சர்ச்சைக்குள்ளான கேட் கீப்பர் 3 உயிர்கள் இழந்ததற்கு காரணமாக அமைந்துள்ளார். 

 

Tags :

Share via