வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: பயனாளிகள் மகிழ்ச்சி.

by Staff / 12-08-2025 02:33:30pm
வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: பயனாளிகள் மகிழ்ச்சி.

சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12), வயதானோர், மாற்றுத்திறனாளிகள் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் வீட்டுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் கிடைப்பது பேருதவியாக இருப்பதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர். ரேஷன் பொருளை வாங்க மயங்கி விழும் நிலை ஏற்படாது என மூதாட்டி ஒருவர் நெகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை வீடுகளுக்கு நேரில் சென்ற வழங்கினார்.

 

Tags : வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: பயனாளிகள் மகிழ்ச்சி

Share via