பெண்ணிடம் மின்சாரத்துறை ஊழியர் என கூறி மின் மீட்டரை விற்ற மர்ம ஆசாமி .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் கார்த்திகை வீதியில் சாத்துரப்பன் என்பவர் மகன் தனசேகரன் என்பவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை தனசேகரன் அழகுராதாகிருஷ்ணன், குணசுந்தரி(45) தம்பதியினருக்கு வாடகைக்கு வீட்டுள்ளார். மற்றொரு வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது.மேலும் வீட்டில் மின் வயர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில் அழகுராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெள்ளை நிற பேண்ட் சர்ட் அணிந்த நபர் ஒருவர் வந்து ள்ளார் அப்போது வீட்டில் இருந்த குணசுந்தரியிடம் அந்த நபர் எட்டயபுரம் மின்வாரியத்திலிருந்து வருவதாகவும் சாத்துரப்பன் பெயருக்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பம செய்துள்ளார் எனவும் அதற்கு புதிய மின் அளவி மீட்டர் வந்துள்ளது.எனக்கூறி தான் கொண்டுவந்த ஒரு மின்அளவி மீட்டரை கொடுத்து கட்டணமாக ரூ.5100 தேவை என கேட்டுள்ளார்.
இதனையடுத்து குணசுந்தரி மதுரையில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர் தனசேகரன் தாயார் ரத்தினம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மீட்டர் மாற்றுவது மின்சாரதுறையில் இருந்து ஆள் வந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். ரத்தினம்மாள் குணசுந்தரியிடம் மின்வாரிய ஊழியருக்கு பணம் கொடுக்க கூறியுள்ளார். குணசுந்தரியும் போலி மின்ஊழியரிடம் 5500 கொடுத்துள்ளார். அப்போது தன்னிடம் சில்லரை இல்லை என கூறி சில்லறை மாற்றி வருவதாக மர்ம நபர் கூறி சென்றுள்ளார்.நீண்ட நேரமாகியும் மின் ஊழியர் வராததால் இது குறித்து எட்டயபுரம் மின்அலு வலகத்திற்கு தொடர்பு கொண்டு ள்ளார்.மின்சார அலுவலகத்தில் இருந்து புதிய மின் மீட்டர் மாற்ற யாரையும் அனுப்ப வில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட குணசுந்தரி தான் போலி மின் ஊழியரி டம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து எட்டயபுரம் மின் வாரிய அலுவலகம் மற்றும் எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த மர்ம நபர் மேலும் யாருக்கும் இது போல மீட்டர் கொடுத்தும் ஏமாற்றியுள்ளான்ன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.-
Tags : koilpatti