போலீசிடம் இருந்து தப்பி ஓட முயன்ற நபர் பள்ளத்தில் விழுந்து கை முறிவு

by Staff / 24-04-2022 12:52:44pm
போலீசிடம் இருந்து தப்பி ஓட முயன்ற நபர் பள்ளத்தில் விழுந்து கை முறிவு

நெல்லை மாவட்டம் பலவூரில் நடைபெற்ற கொடை விழாவின் போது காவல் உதவி ஆய்வாளரை  கத்தியால் வெட்டிய வழக்கில் கைதான நபர் போலீஸாரிடம் இருந்து தப்ப முயலுகையில் பள்ளத்தில் விழுந்து கை முறிவு ஏற்பட்டது .சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் மார்கரெட் தெரசா  என்பவர் பழவூர்  உச்சிமாகாளியம்மன் கோவில் கொடை விழா பாதுகாப்பு பணிக்கு சென்ற போது ஆறுமுகம் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்வதற்காக அழைத்து சென்றுள்ளனர்.கொண்ட நகரம் பாதையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றபோது காவல்துறையினரிடம் இருந்து ஆறுமுகம் தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது போலீசார் விரட்டியதில் அங்கிருந்து பள்ளத்தில் விழுந்து ஆறுமுகத்தின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories