தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிர பிரச்சாரம்

by Admin / 21-04-2026 02:57:43am
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிர பிரச்சாரம்

கோவையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக மகிளா மோர்சா தேசிய தலைவரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்அம்மனுக்கு அர்ஜுனன், கோவை தெற்கு கே.ஆர். ஜெயராமன் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியதோடு மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் கூறினார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர் கோவையை தொடர்ந்து ஓசூர், தளி மற்றும் சென்னையில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் .அதனை தொடர்ந்து மதுரை மற்றும் சாத்தூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

 

Tags :

Share via
Logo