மற்றொரு அபிராமி.. குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்

by Editor / 26-07-2025 04:22:39pm
மற்றொரு அபிராமி.. குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்

கோவை: இருகூரில் 4 வயது பெண் குழந்தை மர்ம மரணத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், வசந்த் என்பவருடன் தமிழரசிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களின் உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால், தனது குழந்தையை தமிழரசியே கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தழிழரசி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் வசந்த்திற்கு தொடர்புள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via