உணவில் விஷம் கலக்க முயற்சி.. நடிகை பரபரப்பு பேட்டி

by Editor / 26-07-2025 04:20:01pm
உணவில் விஷம் கலக்க முயற்சி.. நடிகை பரபரப்பு பேட்டி

என்னை கொல்ல முயற்சி நடப்பதாக `தீராத விளையாட்டுப் பிள்ளை' பட நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனுஸ்ரீ, "திரைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த `Me Too' விவகாரத்தில் குரல் கொடுத்த பின்னர் என்னை சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. காரில் பிரேக் ஃபெயிலியர், உணவில் விஷம் கலக்க முயற்சி என என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணருகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via