ரூ.10 லட்சத்துக்கு குழந்தைகள் விற்பனை.. ஆடியோவால் சிக்கிய 3 பெண்கள்
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் ஐடி ஊழியர் கார்த்திக். இவருக்கு தெரிந்த தீபா என்ற பெண், தனது தோழி சொல்லும் வேலை செய்தால் நிறைய பணம் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதன் பேரில் கார்த்திக், வித்யா என்ற பெண்ணுடன் பேசும்போது, குழந்தைகள் விற்பனை தெரியவந்துள்ளது. பெண் குழந்தை என்றால் ரூ.10 லட்சம், ஆண் குழந்தை என்றால் ரூ.15 லட்சம் என அப்பெண் பேரம் பேசியுள்ளார். இந்த ஆடியோவை போலீசிடம் காண்பித்த நிலையில், கார்த்திக் உதவியுடன் குழந்தை விற்பனை கும்பல் சிக்கியது.
Tags :



















