சென்னை குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர்வரத்து.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2650 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 4364 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 3470 கன அடி நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது சென்னை குடிநீருக்காக 195 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 1081 மில்லியன் கனடியில் தற்போது 130 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு தற்போது 140 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3231 மில்லியன் கனடியில் தற்போது 616 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 720 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 1240 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் சென்னை குடிநீருக்காக 400 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 319 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 250 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 188 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
Tags : சென்னை குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர்வரத்து.