ஃபெங்கல் புயல் எதிரொலி 4மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ஃபெங்கல் புயல் எதிரொலி 4மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்.