வங்கதேச அடுத்த பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சி செயல் தலைவர் தாரிக் ரகுமான் பதவியேற்க உள்ளார்.
வங்கதேச அடுத்த பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சி செயல் தலைவர் தாரிக் ரகுமான் பதவியேற்க உள்ளார். நேற்று நடைபெற்ற 13 வது பொது தேர்தலில் 300 தொகுதிகளில் 185 க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றிய தேசியவாத கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியோ வின் மகனான இவர் 2008 இல் இருந்து லண்டனில் தஞ்சம் புகுந்து 2024க்கு பிறகு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து 2025 டிசம்பரில் மீண்டும் வங்கதேசம் திரும்பினார். தாரிக் ரகுமான் டாக்கா- 17 மற்றும் போகுரா -6 ஆகிய இரண்டு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் ஜனநாயக தேர்தல் இது.
Tags :


















