தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார்

by Staff / 31-10-2022 04:28:15pm
தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார்

கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக ஆளுநர் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார் என குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via