வால்பாறை அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

by Editor / 10-07-2022 12:58:43pm
வால்பாறை அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

 
கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலைப்பகுதியான வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ளமலை, இறைச்சிப்பாறை, சின்னகல்லார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சோலையார் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.தொடர்ந்து அக்காமலை, கருமலை, அட்டகட்டி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடுமலை ஆறு, வாழைத்தோட்ட ஆறு உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 

Tags :

Share via

More stories