குற்றால அருவிகளில் குளிக்க 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள்,ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி.

by Editor / 03-01-2022 09:41:33pm
குற்றால அருவிகளில் குளிக்க 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதால்  சுற்றுலா பயணிகள்,ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி  ஆகிய அருவிகளில் கொரோனா விதிமுறை காரணமாக 8  மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அருவிகளில்  குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி  அனுமதி அளித்திருந்தது. அதனை தொடர்ந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து சென்றனர்.

  ஆங்கில புத்தாண்டு தினத்தில் அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதாலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் அச்சம் காரணமாகவும்  கடந்த 31.12.2021முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள், ஐயப்பபக்தர்கள்  அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் அந்த தடையை மாவட்ட நிர்வாகம்  நீங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குற்றால அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  மேற்கு தொடர்ச்சி மலைபவனப்பகுதிகளில் 2ஆம் தேதி பெய்த  மழையால் குற்றாலஅருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டிவருகின்றது.

 

Tags :

Share via

More stories