உமர் அப்துல்லாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "உமர் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
Tags :