மருத்துவ கழிவுகளை கொட்டிய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மாயாண்டி(42), லாரி உரிமையாளர் செல்லத்துரை(32) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் கடந்த மாதம் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் கேரள அதிகாரிகளால் அகற்றப்பட்டு, 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : மருத்துவ கழிவுகளை கொட்டிய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது