தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றியமகன்
தமிழ்நாட்டிலுள்ள பலமாவட்டங்களில் உள்ள பகுதிகளிலுள்ளவர்கள் தங்களது தாய்,தந்தையர்கள் பெயரிலுள்ள சொத்துக்களை பறித்துக்கொண்டு அவர்களை அனாதைகளாக முளைவிடும் நிலை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.பலமாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்புநாள் முகாம்களில் இதுபோன்ற மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.கள்ளக்குறிச்சிமாவட்டம் ஆரிநத்தம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (85) என்பவரின் மூத்த மகன் விபூஷணன் தனது தந்தையை கள்ளக்குறிச்சியை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இது குறித்து லட்சுமணன் சார் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து பத்திரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
Tags : தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றியமகன்