கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

by Staff / 24-05-2024 11:52:09am
கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மே 24) வெள்ளிக்கிழமை அதி பயங்கர சாலை விபத்து நடந்தது. மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

Tags :

Share via