அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 3 பைசா: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

by Editor / 01-08-2024 03:23:46pm
அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 3 பைசா: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். மக்களவையில் விளக்கம் அளித்த அவர், ஒரு நிமிடத்திற்கு அழைப்பு கட்டணம் 53 பைசாவாக இருந்தது, ஆனால் தற்போது அது 3 பைசாவாக குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. ஏப்ரல் 2024க்குள், நாட்டில் உள்ள 95.15% கிராமங்கள் இணைய வசதியைப் பெறும் என்றார்.
 

 

Tags :

Share via

More stories