அஜித்குமார் நகைத் திருட்டு வழக்கு - நிகிதா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நிகிதா சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அஜித்குமார் மீது நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயார் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :