சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா ஆளுநரின் பரிந்துரைகள் அரசியலமைப்புக்கு முரணானவை -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்த கருத்துகளை நிராகரிக்கும் தீர்மானம், இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.. 2025-ஆம் ஆண்டுக்கான சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, ஆளுநரின் பரிந்துரை பெறப்பட்டது.. ஆளுநர் சில திருத்தங்களைச் செய்யுமாறு பரிந்துரைத்தார்.
ஆளுநர் மசோதாவை ஆராய்வதற்கு முன்னர் அதில் கருத்துத் தெரிவிக்க அரசியலமைப்புச் சட்டம் அவருக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஆளுநரின் பரிந்துரைகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் அவர் தெரிவித்தார். ஆளுநரின் பரிந்துரைகள் அவையின் மாண்பைக் குறைப்பதாகக் கூறி, அதை நிராகரிக்கும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. திருத்தங்கள் செய்யும் அதிகாரம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் வலியுறுத்தப்பட்டது.தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆளுநருக்கு மீண்டும் மசோதா அனுப்பி வைக்கப்படும். 2022-இல் நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர். என். ரவி இரண்டு முறை திருப்பி அனுப்பினார். அதில் சில திருத்தங்களைச் செய்யுமாறு அவர் கோரினார்..எனவே, சட்டரீதியான ஆய்வுக்குப் பிறகு புதிய மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
Tags :