அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.

by Editor / 23-02-2022 09:38:43am
அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு 15 வார்டு களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று  நடைபெற்றது.  கரம்பக்குடி பேரூராட்சியில்  7- வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷா ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் அதே வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷாவின் உறவினரான பிரித்திவிராஜா 175 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்த விவகாரம் அரசியல் சூழலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 இந்நிலையில் கறம்பக்குடி 7-வது வார்டில் அதிமுக வேட்பாளரை ஒரு ஓட்டு கூட வாங்க விடாமல் வெற்றி பெற்ற வேட்பாளர் பிரித்திவிராஜ் அதிமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷா ஒரு ஓட்டு கூட வாங்காமல்  தோல்வியை சந்தித்தார்.  இதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட அவரது உறவினர் பிரித்திவிராஜ் வெற்றி பெற்ற சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 7-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரித்திவிராஜா 175 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.இந்நிலையில், பிரித்திவி ராஜாவும் அவரது தந்தையும் அமமுகவின் நகர பொருளாளர் பரமசிவம் மற்றும் கரம்பக்குடி அமமுக நகர செயலாளர் சதக்கத்துல்லா,உள்ளிட்டோர் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

Share via

More stories