சென்னை - திருநெல்வேலி இடையே நவம்பரில்வந்தே பாரத் ரயில் சேவை
சென்னை ஐ. சி. எஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில்கள்தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 33வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை, காசர்கோடு -திருவனந்தபுரம் இடையே தலாஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த 3 வந்தே பாரத்ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை - திருப்பதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
31, 32, 33-வது வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 31-வது வந்தேபாரத் ரயில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சாம்பல் நிறம் கொண்ட இந்த ரயில் சமீபத்தில்தான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த ரயில் மங்களூரு - பாலக்காடு அல்லது சென்னை- மங்களூரு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tags :