கருவில் இருப்பது ஆணா பெண்ணா தோப்புக்கு நடுவே இரகசிய ஸ்கேன் மையம்

by Admin / 10-03-2022 03:17:40pm
கருவில் இருப்பது ஆணா பெண்ணா தோப்புக்கு நடுவே இரகசிய ஸ்கேன் மையம்

திருப்புத்தூர் அருகே விவசாய நிலத்துக்கு நடுவே குடிசை வீட்டில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையம் கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது தெரியப்படுத்தும் சட்டப்படி குற்றமாகும்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்து கதிரம்  பாடியில் வயல்வெளிக்கு நடுவே சிறிய வீடு ஒன்றில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை நடைபெறுவதாக சென்னையிலுள்ள சுகாதாரத்துறை அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற அதிகாரிகள் சுகுமார் வேடியப்பன் என இருவரையும் கைது செய்தனர் ஒரு ஸ்கேனுக்கு தலா 8000 ரூபாய் வரை அவர்கள் வசூல் செய்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் எவ்வித உறுத்தலும் இன்றி அதிகாரிகளுடன் சேர்ந்து மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டு உள்ளன.

இதில் சுகுமாரி ஏற்கனவே இதே குற்றத்துக்காக 4 முறை கைது செய்யப்பட்டவன் என்பது தெரியவந்துள்ளது

 

Tags :

Share via