அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் நாளை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சத்து 1 இலட்சத்து 22, 000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம், அரசு காலனி பகுதியில் நடைபெறும் ரேக்ளா பந்தயம், கோடங்கிபட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.
இதனை ஒட்டி நாமக்கல் வழியாக கரூர் மாவட்ட எல்லையான வாங்கல் பகுதிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார் அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் கும்ப ஆளாத்தி, மேள தாளங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், அரசு அதிகாரிகள், திமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அலைகடலென ஏராளமான வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags :