பிரபல ஓட்டல் உரிமையாளர் மரணம்

by Staff / 20-11-2022 01:10:31pm
பிரபல ஓட்டல் உரிமையாளர் மரணம்

ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும், தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்தில் உள்ள கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அவரது ஓட்டுநர் டெல்லி மாண்ட்வலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அமித் ஜெயனின் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த தடயமும் சிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via