வயநாடு நிலச்சரிவு: ரூ.50 லட்சம் வழங்கிய சூர்யா குடும்பம்

by Editor / 01-08-2024 03:20:05pm
வயநாடு நிலச்சரிவு: ரூ.50 லட்சம் வழங்கிய சூர்யா குடும்பம்

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 2 நாட்களில் 1,592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 166 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via