கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்அமைச்சர் துரைமுருகன்.
2026 சட்டமன்றத்தேர்தலை கருத்தில்கொண்டு கட்சியையும்,ஆட்சியில் மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளையும், மக்களிடம் கொண்டுசேர்க்கும் வண்ணமாக தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல்பணிகளை முன்னெடுத்துள்ளது.இதன் ஒருபகுதியாக வேலூர்மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசும்போது:, என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன். ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டேன். கடந்த முறை தேர்தலின்போது கொஞ்சம் ஏமாந்து விட்டேன். ஆனால், இந்த முறை அப்படி நடக்கவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
Tags : கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்அமைச்சர் துரைமுருகன்.