இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Editor / 25-02-2022 02:40:49pm
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வகம், "இந்தோனேசியா வடக்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள புக்கிட்டிங்கி நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் தீவின் வடக்கே ஏற்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அண்டை மாகாணங்களான ரியாவ், வடக்கு சுமத்ராவிலும் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள், அல்லது கட்டடங்கள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.

2004-ம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி ஏற்படக் காரணமான நிலநடுக்கம் இந்த சுமத்ரா கடற்கரைத் தீவில் தான் தொடங்கியது. அப்போது 9.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

அதன் பாதிப்பாக இந்தோனேசியா பகுதியில் 2,20,000 மக்கள் உயிரிழந்தனர். மேலும், இந்தோனேசியாவில் இது போன்ற நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Powerful earthquake shakes the island of Sumatra

Share via