ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
உக்ரைனில் பல்முனை தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா.
உக்ரைன் மீது ரஷியா பலமுனைத் தாக்குதல்களை வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 40 போ் உயிரிழந்ததாகவும், 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ நிலைகள் தகா்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாயனது.
இந்நிலையில், உக்ரைன் மீது இரண்டாவது நாளாக பலமுனைத் தாக்குதல்களை தொடங்கிய ரஷிய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது குண்டுகள் வீசி வருகிறது.
இதனிடையே, உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதியுதவி அளிக்க தயார் என அறிவித்துள்ள உலக வங்கி, நெருக்கடியான நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என உலக வங்கி குழுவின் தைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயாராக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்திருந்த நிலையில், உக்ரைனில் பல்முனை தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா.
பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷியா சைபர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Tags : The United States has imposed sanctions on Russia