ஏசி பழுது பார்த்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

by Staff / 25-08-2024 02:11:46pm
ஏசி பழுது பார்த்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை  தாம்பரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (26). 'ஏசி' மெக்கானிக்கான இவர் தாம்பரம், மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், நண்பர்களுடன் சேர்ந்து, ஏசி பழுது நீக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பணி நடந்து கொண்டிருந்த இடத்தின் கீழ் வெல்டிங் வேலை நடந்தது. அப்போது, மின்சாரம் பாய்ந்து, ஏசி இயந்திரத்தின் காப்பர் வடத்தின் மீது பட்டது. அப்போது பிரேம்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

Tags :

Share via