உத்தராகண்ட் நிலச்சரிவு.. பிரதமர் இரங்கல்

by Editor / 05-08-2025 05:15:37pm
உத்தராகண்ட் நிலச்சரிவு.. பிரதமர் இரங்கல்

உத்தராகண்டின் உத்தரகாசி இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'முதலமைச்சர் புஷ்கர் தாமியுடன் பேசி நிலைமை குறித்த தகவல்களைப் பெற்றுள்ளேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், மீட்பு குழுவினர் அனைத்து வழிகளிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு உதவி வழங்குவதில் தொடர்ந்து செயல்படுவோம்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via