விருதுநகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் -
தமிழகம் முழுவதும் இன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் நிறுவனத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைப்படி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதக்கீடு வழக்கிட தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஆயிரம் நாட்களை கடந்த பிறகும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதை கண்டித்து அதனை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவும், மற்றும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க எந்த வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களை கடந்த பிறகும் இன்னும் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட மறுப்பதை கண்டித்தும்,200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்ட முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags : விருதுநகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் -