ராசாத்தி அம்மாள் காலைத் தொட்டு ஆசி பெற்ற முதல்வர் 

by Editor / 07-05-2021 04:16:43pm
ராசாத்தி அம்மாள் காலைத் தொட்டு ஆசி பெற்ற முதல்வர் 

 

அண்ணா, கருணாநிதி, பெரியார், சமாதிகள் மற்றும் அன்பழகன் படத்துக்கு மரியாதை செய்தவர் மதியம் கோட்டைக்கு சென்று முதல்வர் பொறுப்பை ஏற்றார். அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் கோட்டையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மயிலாப்பூர் சிஐடி காலனியில் அமைந்துள்ள மறைந்த கருணாநிதியின் துணைவியார், ராசாத்தி அம்மாள் இல்லத்திற்கு சென்றார். அவரை, தங்கையும், எம்.பி.யுமான கனிமொழி வரவேற்றார். வீட்டுக்குள் வந்த ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் காலைத் தொட்டு ஆசி பெற்றார்.முன்னதாக ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில், திமுக எம்.பி. கனிமொழி தனது மகன் ஆதித்யாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo