பள்ளிகள், தியேட்டர்கள் திறக்கப்படுகிறதா?.. ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.. நேற்றைய தினம் கூட்டம் திடீர் ரத்தான நிலையில், இன்று கூட்டம் நடக்க உள்ளது.. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்தது... இதனால் பலர் உயிரிழந்தனர்.. தொற்று பாதிப்புக்கு ஏராளமானோர் ஆளானார்கள்.. ஒரு நாளைக்கு 30 ஆயிரத்தை கடந்து தொற்று எண்ணிக்கை உயர்ந்தது.
எனவே, நம் மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தொற்று பாதிப்பானது 2,000-க்கும் கீழே குறைந்தது.. இருந்தாலும், சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தொற்று குறையாமல் இருந்தது.. இங்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை கையில் எடுத்ததையடுத்து, கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது... பிற மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது.. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்தக் கூட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.. தியேட்டர்கள் திறப்பது குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது.. இதையடுத்து, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்..!
Tags :