பைக் ரேஸில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவர் விபத்தில்பலி

by Editor / 27-01-2025 10:16:29am
பைக் ரேஸில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவர் விபத்தில்பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ஹரிஷ் ஆகிய இரண்டு பேரும் பைக்கில் அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பைக் விழுந்தது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : பைக் ரேஸில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவர் விபத்தில்பலி

Share via