ரயில் பயணத்தில் பெற்றோரிடம் இருந்து பிரிந்த 8 வயது குழந்தை மீட்பு.
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்த நாடு தாலுகா ஈச்சங்கோட்டை சண்முகானந்தம் மகள் சிறுமி சோபிகா 8 வயது தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு ஊர் திரும்பும்போது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இண்டர் சிட்டி எஸ்பிரஸில் ஏறியபோது கவனக்குறைவாக குழந்தையை நடைமேடை என் 3 ல் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். மேற்படி குழந்தையை பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் திரு பாஸ்கரன் அவர்கள் மற்றும் பெண்காவலர் திருமதி பவித்ரா ஆகியோர் காவல் நிலையம் அழைத்துவந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தையின் பாட்டி ராசாத்தி ,மாமா அறிவழகன் வசம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
Tags : ரயில் பயணத்தில் பெற்றோரிடம் இருந்து பிரிந்த 8 வயது குழந்தை மீட்பு.













.jpg)





