சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 35 ரூபாய் அதிகரித்து 6, 675 க்கு ஒரு சவரன் 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7175 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 89 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள். நடுத்தர மக்கள் தங்க விலையின் காரணமாக தங்களுடைய பெண்களுக்கு திருமணம் செய்வதை ஒரு மிகுந்த சிரமத்திற்குரியதாகவே பார்க்கின்றனர்.
Tags :