அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்ட போது அவர் பாதுகாப்பு கருதி சரிபார்ப்பில் தோல்வி அடைந்துள்ளவர் .

by Admin / 20-04-2026 10:21:35am
அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்ட போது அவர் பாதுகாப்பு கருதி சரிபார்ப்பில் தோல்வி அடைந்துள்ளவர் .

இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் லார்டு மாடல் சன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டதில் நடந்த பாதுகாப்பு சரிவார்ப்பு ஊழல் காரணமாக பதவி விலக வேண்டும் என்கிற அழுத்தம் தோன்றியுள்ளது. லார்ட் மாண்டேன்சன் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்ட போது அவர் பாதுகாப்பு கருதி சரிபார்ப்பில் தோல்வி அடைந்துள்ளவர் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது தகுதி பெறவில்லை என்ற பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி வெளிவர அமைச்சகம் அவரை பணியில் அமர்த்தி உள்ளது .இந்த தகவல் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் இதை அறிந்து தான் மிகவும் ஆத்திரமடைந்துள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார். பிரதமர் பாராளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதாகவும் தகுதியற்ற ஒருவரை முக்கியமான பதவிக்கு நியமித்ததில் அவருக்கு பொறுப்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், அவரை பதவி விலகவும் வலியுறுத்தியுள்ளன. இந்த ஊழலைத் தொடர்ந்து வெளியேறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஸர் ஆலி ராபின்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளதோடு இது தொடர்பான உண்மைகளை ஏப்ரல் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo