எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சந்திக்கத் தயார் - செல்லூர் ராஜூ
செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது,
'அதிமுகவை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் இன்று மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு அஞ்சலியை செலுத்தியுள்ளோம். கொரோனா உயிர்க்கொல்லி நோய் உலக மக்களிடையே கடந்த 450 நாட்களாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். ஆனால், திமுக பழிவாங்கும் நடவடிக்கையாக செய்வதால்தான் அதிமுக அதனை எதிர்க்கிறோம். அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். அதை மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அதிமுக போரட்டம் நடைபெற்றது. அதிமுக போராட்டம் குறித்து வணிகவரி பதிவுத்துறை அமைச்சருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உளவுத்துறை காவல் துறையின் தகவலின் படி அதிமுக போராட்டம் பற்றி முதல்வருக்கு தெரியும்.
போராட்டன் மூலம் அதிமுக தற்போது உயிரோட்டமாக உள்ளது. அதிமுக எப்போதும் எழுச்சியோடு உள்ளது. அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் போராட்டத்தில் தொண்டார்கள் உற்சாக கலந்து கொண்டார்கள். திமுக ஆளுங்ட்சி என்றால் அத்துமீறல் கூடும் என்பது நிதர்சனமான உண்மை. திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.
Tags :