ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி சமூக வலைதள பதிவும் எதிா்ப்பும்

by Admin / 05-06-2026 02:06:36pm
ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி சமூக வலைதள  பதிவும் எதிா்ப்பும்

காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி சமூக வலைதள பக்கத்தில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்னும் ஒரு கூட்டணியை புதிய சொல்லாடலுடன் உருவாக்கி நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்ததற்கு தமிழக அரசியல் கட்சிகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள. அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சிவி சண்முகம் தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு ஆன ஒருராஜ்யசபா உறுப்பினர் காலியிடம் அறிவிக்கப்பட்டது அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி பிரவீன் சக்கரவர்த்தியை வேட்பாளராக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவரான கூட்டணிக்கு தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்றவர் பெயரிட்டு அந்த பதிவில் தமிழக வெற்றி கழகம், காங்கிரஸுடன் சேர்த்து விடுதலை சிறுத்தை கட்சி, முஸ்லிம் லீக் கட்,சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பெயர்களை குறிப்பிட்டு தன்னை முதல் எம்பி வேட்பாளராக தேர்வு செய்ய,ப்பட்டதற்கு பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுவதாக  கூறி பதிவிட்டு இருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பெ சண்முகம் புதிய கூட்டணியின் பெயரில் தங்களை இணைத்து பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டு இருப்பது முற்றிலும் தவறானது அது ஒரு அதிக பிரசிங்கத்தனம் எனவும் சாதி இருந்தார்.. இவரைத் தொடர்ந்து சி பி ஐ உன்னால் தலைவர் முத்தரசனும் அந்த கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று பகிரங்கமான அறிவிப்பை வெளியிட்டார்.

 

Tags :

Share via
Logo