செலுத்திய வரிக் கட்டணத்தை திரும்பப் பெறக்கோரி  அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்கு

by Admin / 24-02-2026 09:42:38am
செலுத்திய வரிக் கட்டணத்தை  திரும்பப் பெறக்கோரி  அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்கு

அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசரநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி விதித்த இறக்குமதி வரி சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து,  பெட்இக்ஸ் நிறுவனம் செலுத்திய வரிக் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறக்கோரி  அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது
.உச்ச நீதிமன்றத்  தீர்ப்பால்,  அமெரிக்க அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு சுமார்130 பில்லியன் முதல் 175 பில்லியன் டாலர் வரை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் .

பழைய வரிகள் ரத்து செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதன்படி, அநேகமாக அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% உலகளாவிய வரி விதிக்கப்பட்டுள்ளது

.முந்தைய வரிகள் 'சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டன. ஆனால், புதிய 15% வரி '1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன்' கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.  

செலுத்திய வரிக் கட்டணத்தை  திரும்பப் பெறக்கோரி  அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்கு
 

Tags :

Share via