நள்ளிரவில் வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வடமாநில இளைஞர் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் ஒருவருக்கு வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். விசாரணையில், அதே பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தீப்குமார் (37) என்ற நபர் பால்கனி வழியாக வீட்டுக்குள் புகுந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Tags :