மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர கங்காதர பட்னவீஸ் பதவியேற்பு.
மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் தேவேந்திர கங்காதரபட்னவீஸ் க்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் என். சி .பி தலைவர் அஜித் பவர், சிவசேனா தலைவர் முன்னாள் முதல்வர் ஏக் நாத்ஷிண்டே துணை முதல்வர் ஆகவும் பதவி ஏற்றனர். பட்னாவிஸ் முதல்வராக மூன்றாவது முறை பதவி ஏற்று உள்ளார். இவ்விழாவில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ,நிதின் கட்காரி, ராஜநாத் சிங் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பா.ஜ.க முதல்வர்கள் ,திரை உலக பிரமுகர்கள் ஷாருக்கான் சல்மான் கான், ரன்வீர் கபூர் ,மாதுரி தீட்சித், சஞ்சய் தத், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, பிர்லா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Tags :